கோவை: பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

68பார்த்தது
கோவை சிங்காநல்லூரில் ஆட்டோவை முந்திச் சென்றதால் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை, சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரியும் புஷ்பராஜ் என்பவர் நேற்று முன்தினம் (பிப்.6) தாராபுரத்தில் இருந்து கோவை திரும்பிக் கொண்டிருந்தார். சிங்காநல்லூர் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, அவர் ஆட்டோ ஒன்றை முந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆட்டோவை சேதப்படுத்தியதாகக் கூறி, ஆட்டோவில் இருந்த முகமது ஆசிக் என்பவரும் அவரது குடும்பத்தினரும் புஷ்பராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் புஷ்பராஜ் காரை எடுத்துக்கொண்டு குளத்தேரி பங்கிற்கு வந்துள்ளார். 

அவரை ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்த முகமது ஆசிக் மற்றும் குடும்பத்தினர் பெட்ரோல் பங்கிற்கு வந்து புஷ்பராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது காரையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் புஷ்பராஜிற்கு நெற்றியில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி