கோவையில் நொய்யல் நதியின் கிளை நதியான கௌசிகா நதி, இறைச்சிக்கழிவுகளால் மாசடைந்து வருகிறது. தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் இறைச்சிக்கழிவுகளை கொட்டுவதால், நீர் ஆதாரமாக விளங்கும் கௌசிகா நதி சுகாதார சீர்கேடுக்கு உள்ளாகி உள்ளது. இதனால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கும் கால்நடைகளுக்கு நீர் வழங்குவதற்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கௌசிகா நதியை மீட்டெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.