கோலாகலமாக துவங்கியதேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டி

62பார்த்தது
கோவையில் 23 வது ஜூனியர் தேசிய வூசு சாம்பியன்ஷிப் போட்டி,
வீரர், வீராங்கனைகள் அணிவகுப்புடன், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.

கோவையில் தேசிய அளவிலான 23 வது வூசு ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் துவங்கியது.

இரண்டாவது நாளான இன்று பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம்,
மணிப்பூர் , மகாராஷ்டிரா, கேரளா, தமிழ் நாடு வீரர், வீராங்கனைகளின் தற்காப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தற்காப்பு கலையான வூசு கலையை மாணவ, மாணவிகள் வாள், சுருள் வாள், மற்றும் கம்புகளை சுற்றி அசத்தலாக செய்து காண்பித்தனர்.

இதனை கூடியிருந்த பார்வையாளர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
போட்டிகள் முறையே, சான்சூ மற்றும் டவ்லு ஆகிய இரண்டு பிரிவுகளில் நடைபெற்றன.