தத்வமஸி ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் ஐந்தாம் ஆண்டு மண்டல பூஜை

572பார்த்தது
கோவை கவுண்டம்பாளையம் டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள சுஹிதா திருமண மண்டபத்தில் ஸ்ரீ தத்வமஸி ஐயப்ப பக்தர்கள் மற்றும் சக்தி கார்டன் பிரைம் அவென்யூ பொதுமக்கள் இணைந்து அருள்மிகு தத்வமஸி ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் ஐந்தாம் ஆண்டு மண்டல பூஜை மார்கழி 14ம் மற்றும் 15ம் நாள் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ கன்னிமார் ஸ்ரீ கருப்பராயர் திருக்கோயிலில் மூலவர்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை காலை 6 மணி முதல் கணபதி ஹோமம், ஐயப்ப சுவாமிக்கு பீட பூஜை மற்றும் மாலை 5 மணி அளவில் கவுண்டம்பாளையம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது. மாலை 7 மணி அளவில் 108 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 5 மணி முதல் கணபதி ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமம், காலை 9 மணி அளவில் அருள்மிகு தத்வமஸி ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் 21 வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் மகா அலங்காரம் நடைபெற்றது. மதியம் 1 மணி அளவில் மகா அன்னதானம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தத்வமஸி ஸ்ரீ ஐயப்ப பக்தர் குழு தலைவர் குருநாதர் தேவராஜ், செயலாளர் குருநாதர் பெருமாள், பொருளாளர் கவிதா ரமேஷ், கௌரவ ஆலோசகர்கள் மணி, பாலகிருஷ்ணன், விழா கமிட்டி தலைவர் ராஜன் சாமி மற்றும் ஐயப்ப சுவாமி பக்தர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி