கோவை சர்வதேச விமான நிலையத்தில் 'டிஜி யாத்ரா' திட்டம் தொடங்கப்பட்டது. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் நேற்று(செப்.6) நடந்த நிகழ்வில், காணொலி காட்சி மூலம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு 'டிஜி யாத்ரா' திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கோவை உள்ளிட்ட பாட்னா, ராய்பூர், புவனேஸ்வர், கோவா(தாபோலிம்), இந்தூர், பாக்டோகரா, விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று (செப்.6) மத்திய அமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
விமான நிலையத்தில் தனியாக ஏற்படுத்தப்பட்ட வழியில் உள்ள டிஜிட்டல் கருவியில் மொபைல் போனில் உள்ள விவரங்கள் மற்றும் தங்களின் முகத்தை காண்பித்து உடனடியாக ஒப்புதல் பெற்று உள்ளே செல்லலாம். குறிப்பாக மொபைல் போன் எண்ணுடன் ஆவணங்கள் அனைத்தும் லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.