கோயிலில் சுவாமிக்காக தேங்காய் உடைக்கும் போது அது அழுகியிருந்தால் உடனே மனம் பதட்டப்படும். உண்மையில் தேங்காய் உடைக்கும் போது, அழுகியிருந்தால் கவலைப்பட வேண்டாம் என ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஏனென்றால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உள்ள கண் திருஷ்டி நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. அதையும் மீறி மனம் சஞ்சலப்பட்டால் 5 பேருக்கு அன்னதானம் செய்துவிட்டு, மீண்டும் தேங்காய் வாங்கி உடைக்கலாம்.