பின் வரிசையில் எம்.எஸ்.தோனி களமிறங்குவது குறித்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "தோனியின் உடல் வலிமையும், கால் முட்டியும் முன்பு இருந்ததைப் போல கிடையாது. அவரால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது. தன்னால் முடிந்த வரை அணிக்கு பங்களிப்பை தருகிறார். ஆட்டத்தின் தன்மை எப்படி உள்ளது என்பதைப் பொறுத்து, சில போட்டிகளில் சற்று முன்பாக களமிறங்குவார்” என்று கூறியுள்ளார்.