ஆர. எஸ். எஸ் தென் மாநில தலைவர் ஆடலரசன் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, நம் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பங்களாதேஷிற்கு, இன்றைய தினம் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. ஜனத்தொகை கூட 22% இருந்தது 7. 9 சதவீதமாக குறைந்து உள்ளது. பல்வேறு துன்புறுத்தல்கள், அச்சுறுத்தலால் இது நடந்திருக்கிறது. பங்களாதேஷில் அனைத்து வகைகளிலும் இந்து மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். அங்கிருக்கக் கூடிய பாதுகாப்பு இன்மை நீங்க வேண்டும். வங்கதேசம் மட்டும் இன்றி அருகாமையில் இருக்கக் கூடிய பாகிஸ்தான் போன்ற நாடுகள் கூட, இந்துக்களுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருகிறது. அதற்கு உறுதுணையாக அருகாமையில் இருக்கக் கூடிய நாடுகளும் இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கக் கூடிய நாடுகள் அதை கவனித்து, அதற்கு ஒரு அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஆர். எஸ். எஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.