விராட் விஸ்வகர்மன மகாஜன சங்கம் சார்பில் 65 ஆம் ஆண்டு ஆவணி அவிட்ட பூணூல் பண்டிகை விழா கணபதி மணியக்காரன் பாளையம் ஸ்ரீ கிருஷ்ணா கவுண்டர் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. ஆவணி மாதம் மூன்றாம் நாள் பௌர்ணமி திதியும், அவிட்டம் நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய நன்னாளில் பூணூல் பண்டிகை 65 ஆவது ஆண்டு விழா விராட் விஸ்வகர்மன மகாஜன சங்கம் சார்பில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முதல் நிகழ்வாக, காலை ஆறு மணி அளவில் சங்கத்தின் கொடியேற்று நிகழ்ச்சியை பொதுச்செயலாளர் வி. பழனிச்சாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து, கடவுள் வாழ்த்துடன் காலை ஆறு முப்பது மணி முதல் கணபதி ஹோமம், பஞ்சபிரம்ம விக்னேஸ்வரர் பூஜை, காயத்ரி ஜெபம், பூணூல் பண்டிகை நிகழ்வு மற்றும் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விராட் விஸ்வகர்மன மகாஜன சங்கத்தின் அறக்கட்டளை தலைவர் எம். திருமூர்த்தி விழா தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் வரவேற்புரை வழங்கினார். விழா குழு தலைவர் வேணுகோபால் நிர்வாக ஏற்பாடுகளை செய்தார். முன்னாள் தலைவர் மகாலிங்கம், கவிதா கோல்ட் வெள்ளிங்கிரி, முன்னாள் உப தலைவர் குப்புசாமி, ஆர் கே, எஸ் கிருஷ்ணசாமி, மனோகரன் சிவ கணேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். அறக்கட்டளையின் பொருளாளர் வெங்கடேஷ் நன்றி உரையாற்றினார்.