தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தனர். தொடர்ந்து யானையை குடிலிலேயே நிறுத்தி பராமரிக்கப்பட்ட நிலையில், இயல்பு நிலைக்குத் திரும்பியதையடுத்து, வெளிப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாகன்களின் கட்டளைகளை யானை பின்பற்றி வருகிறது. இந்த நிலையில் கோயில் வளாகத்தில் உள்ள குளியல் தொட்டியில் நேற்று உற்சாகமாக நீராடியது.