கோவை அவிநாசி சாலையில் உள்ள மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (21.02.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில், மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் நடைபெற்றது.