விமானம் பயணியிடம் தங்க கட்டிகள் பறிமுதல்

66பார்த்தது
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானம் பயணியிடம் தங்க கட்டிகள் பறிமுதல் - வெளிநாட்டு சிகரெட்டுகளும் பறிமுதல்

கோவை, விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் விமானங்களில் தங்கக் கட்டிகள் உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வரும் ஸ்கூட் விமானத்தில் தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர்.

தொடர்புடைய செய்தி