தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெய்ன், காகர்லா உஷா, அபூர்வா ஆகியோருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராக உள்ள அமுதா ஐஏஎஸ்ஸுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.