கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஆதர்ஷ் (25) என்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகடலபாண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் தனது நண்பரின் திருமண ஊர்வலத்தின் போது டிஜே இசைக்கு நடனமாடினார். அப்போது திடீரென மயக்கமடைந்து சுருண்டு விழுந்த ஆதர்ஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.