நடிகர் அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் படத்தின் டிரெய்லரை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.