பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

77பார்த்தது
கொங்கு மண்டலம் என்றாலே தமிழ்நாட்டிற்கு தொழில் வளத்தை கொடுக்கின்ற மண்டலமாகும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த பகுதியில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட
குறு சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

அதற்கு முக்கிய காரணமாக மின் கட்டண உயர்வு உள்ளது.
குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு பல நிறுவனங்கள் மூடிய பிறகும், தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் மூன்று முறை மின் கட்டண உயர்வை உயர்த்தியுள்ளது. 2002 செப்டம்பர் மாதம் 26 விழுக்காடு மின் கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளது. 2023 ஜூலை மாதம் 2. 1 விழுக்காடு உயர்த்தி உள்ளது. 2024 ஜூலை மாதம் 4. 8 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 34 விழுக்காடு 23 மாதங்களில் மின்கட்டணம் திமுக அரசு உயர்த்தி உள்ளது. இதை வன்மையாக கண்டிப்பது மட்டுமின்றி திரும்ப பெற வேண்டியது. இதனால் அனைத்து மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், குறைக்க வேண்டும் இல்லையேல், தமிழகத்தில் தொழில் செய்ய முடியாத சூழல் உருவாகும். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்ததும் மாதம் தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு என தெரிவித்தனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மற்ற மாநிலங்களில் இதை செய்யும்போது ஏன் இங்கு முடியவில்லை.

தொடர்புடைய செய்தி