பொள்ளாச்சி - Pollachi

மீன் கழிவுகளை கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு!

மீன் கழிவுகளை கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் கழிவுநீர் கொட்டப்பட்டதை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான வாகனத்தில், கோழிக்கோட்டில் இருந்து தூத்துக்குடி பகுதியில் உள்ள எம்பிஎன் என்ற தனியார் நிறுவனத்திற்கு மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்காக மீன் கழிவுநீர் கொண்டு செல்லப்பட்டது. இந்த வாகனத்திலிருந்து மீன் கழிவுநீர் கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திறந்து விடப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வாகனத்தை தடுத்து நிறுத்தி, கோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், கேரளா மாநிலத்தில் இருந்து கோழி இறைச்சி, மருத்துவ கழிவுகள் மற்றும் மீன் கழிவுகள் தமிழக பகுதிகளில் அடிக்கடி கொட்டப்பட்டு வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கும், மக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இத்தகைய செயல்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా