கோவை: ஜெயிலர் 2 படப்பிடிப்பு - கோவை வந்த ரஜினிகாந்த்!

85பார்த்தது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நேற்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்திற்காக 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளேன். படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் ரஜினிகாந்தை காண ஆவலுடன் காத்திருந்தனர். காரில் ஏறிய ரஜினிகாந்த், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கையசைத்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் தலைவா தலைவா என்று முழக்கமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சூப்பர் ஸ்டாரின் வருகையால் விமான நிலைய வளாகம் சிறிது நேரம் களைகட்டியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி