கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் பள்ளியில் வயதுக்கு வந்த காரணத்தால் மாணவி ஒருவர் முழு ஆண்டுத் தேர்வு எழுத பள்ளி வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 7 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்ற அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளை மாணவி வகுப்பறைக்கு வெளியே படியில் அமர்ந்து எழுதியுள்ளார். இதனை அறிந்த மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து விசாரித்தபோது, பள்ளி ஆசிரியர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதுகுறித்து இன்று வீடியோ பதிவு செய்த உறவினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர், தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.