கோவை: ஆளுநர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்!

72பார்த்தது
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி பதவி விலக வேண்டும் அல்லது மத்திய அரசு அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று கோவையில் காந்திபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களை ஆளுநர் ஆர். என். ரவி நிறுத்தி வைத்தது தவறு என்றும், அந்தத் தீர்மானங்களை நிறைவேற்ற உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் சுட்டிக்காட்டினர். மேலும், ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி