தேசிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தமிழ் ஆர்வலர்கள் ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினர். ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மும்மொழி பெயர் பலகையில் ஹிந்தி மொழியை கருப்பு பெயிண்ட் கொண்டு அழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குள், ரயில்வே நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, பெயர் பலகையில் மீண்டும் ஹிந்தி எழுத்துக்களை சேர்த்தது. இது தமிழ் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.