தமிழ் வளர்ச்சி துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சி நேற்று கோவை அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் மு. பெ. சாமிநாதன் கலந்துகொண்டு லண்டனைச் சேர்ந்த செல்லத்தம்பி சீரிக்கந்தராசாவிற்கு இலக்கண விருது, சிங்கப்பூரைச் சேர்ந்த பிச்சைமுனிகாடு இளங்கோவிற்கு இலக்கிய விருது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலைஞ்சன் முருகையாவிற்கு மொழியியல் விருது ஆகியவற்றை வழங்கினார்.