கோவை: ஒப்பந்தங்கள் வழங்குவதில் பாரபட்சம்!

60பார்த்தது
கோவை மாநகராட்சியில் ஒப்பந்தங்கள் வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக ஐ. என். டி. யூ. சி. குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஐ. என். டி. யூ. சி. மாவட்ட பொதுச் செயலாளர் பாசமலர் சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது நாங்கள் கோவை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் கட்டுவது, சிறு பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறோம். எங்களை நம்பி தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளன. ஆனால், தற்போது காங்கிரஸ் ஆதரவாளர்களான ஒப்பந்ததாரர்கள் செய்த பணிகளுக்கு அதிகாரிகள் பணி ஆணை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால், தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை எங்களுக்கு வழங்காமல், விதிகளை மீறி வேறு நபர்களுக்கு வழங்கியுள்ளனர். இணையதளம் மூலமாக 30-க்கும் மேற்பட்ட பணிகளை இவ்வாறு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்று அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி