அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

53பார்த்தது
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று(அக்.2) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழுக்கு சேவையாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், சிறந்த தமிழ் சேவகர்களுக்கு மருத்துவப்படி ரூ. 3500 உதவித்தொகை ரூ. 500 என மொத்தம் ரூ. 4000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை அவர்கள் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். மேலும், அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. 2024-2025 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் பயனடைய 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் ரூ. 72000-க்குள் இருக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி