அரசு பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம் துவக்கம்

68பார்த்தது
அரசு பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம் துவக்கம்
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி. ஏ. ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் 'விருட்சம்' எனும் அரசு பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம் துவக்க விழா பள்ளி வளாகத்தில் இன்று(செப்.11) நடைபெற்றது. இதில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''விருட்சம் எனும் திட்டத்தில் பள்ளிகளில் மியாவாக்கி முறையில் காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று இப்பள்ளியில் இத்திட்டத்தை துவங்கியுள்ளோம். கோவை தெற்கு தொகுதிக்கு 1000 மரக்கன்றுகளை மாநில வனத்துறை அமைச்சர் வழங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக இப்பள்ளியின் பசுமைப்படை மாணவர்களோடு இணைந்து நடவுள்ளோம்'' என்றார்.

தொடர்புடைய செய்தி