பெள்ளாதியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

74பார்த்தது
பெள்ளாதியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று (செப்.,21) நடைபெற்றது.

பெள்ளாதி ஊராட்சி மன்ற தலைவர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்த வேலை பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கிய ஊதியம் குறித்து சமூக தணிக்கை நடைபெற்றது.

சமூக தணிக்கையாளர் மற்றும் வட்டார வள பயிற்றுநர் ரவிச்சந்திரன் பங்கேற்று பணிகள் குறித்து தணிக்கை செய்தார். இந்த தணிக்கையில், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டிற்கும் வருகை நாட்களின் கணினி பதிவேடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், விவசாய தோட்டத்தில் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கரை அமைப்பது குறித்த பணிகளையும் பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி