
கோவை: லாட்டரி சீட்டு விற்றவர் கைது; 22 ஆயிரம் பறிமுதல்
தொண்டாமுத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவலின் பேரில், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்றபோது, தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பேக்கரி அருகே அதே பகுதியைச் சேர்ந்த அருணகிரி (வயது 43) என்பவர், தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிகளை விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அருணகிரியை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 22 ஆயிரம் ரூபாய் பணமும், 1 மோட்டார் சைக்கிளும், 2 செல்போன்களும் ஆகியவற்றை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.