கோவை: அம்பேத்கர் பிறந்தநாள்-வானதி சீனிவாசன் மரியாதை!

79பார்த்தது
கோவை வடகோவையில் உள்ள மத்திய உணவுக் கிடங்கில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம். எல். ஏ நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். பாஜக சார்பில் மூன்று விதமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நேற்று மாநிலம் முழுவதும் அம்பேத்கர் சிலைகள் உள்ள இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று ஒவ்வொரு பகுதியிலும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
கோயம்புத்தூர் மாநகர் மாவட்டத் தலைவர் தலைமையில், மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் நந்தகுமார், பட்டியல் சமுதாய அணியின் மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஏப்ரல் 15 முதல் 20 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி