கோவை மாநகரப் பகுதியான வடவள்ளி, தில்லை நகர் பகுதியில் நேற்று இரவு குட்டிகளுடன் காட்டுப் பன்றிகள் புகுந்தன. நாய்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த நபர் ஒருவர் குச்சியுடன் அவற்றை விரட்ட முயன்றார். இதையடுத்து காட்டுப் பன்றிகள் திரும்பி வனப்பகுதியை நோக்கிச் சென்றன. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் புகுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் தனியாகவும், இருசக்கர வாகனத்திலும் செல்வோர் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.