குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டிற்காக பேனல் பொருத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்பவர்களிடம் மின்சார வாரியம் வசூலித்து வந்த நெட்வொர்க் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கோவா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நெட்வொர்க் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெகர்கோட் உத்தரவின் அடிப்படையில் தற்போது நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே இந்த கட்டணத்தை செலுத்தியுள்ள மின் பயனாளர்களுக்கு திருப்பி வழங்குவது குறித்து தனித்தனியாக அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவா மின்சார வாரியத்தின் இந்த அறிவிப்பு, சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் பயனாளர்களுக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.