கோவை: குளத்தின் நடுவே மாட்டிக் கொண்ட குரங்கு!

58பார்த்தது
கோயம்புத்தூர் மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் பரிதாபகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள அணைக்கட்டில் தேங்கியுள்ள சாக்கடை நீர் மற்றும் ஆகாயத் தாமரை செடிகள் அடர்ந்த குளத்தில் குரங்கு ஒன்று தவறுதலாக விழுந்து மாட்டிக்கொண்டது.
நேற்று காலை 6 மணி முதல் அந்த குரங்கு குளத்தின் நடுவே இருந்த காய்ந்த மரக்கிளையைப் பிடித்தவாறு வெளியேற முடியாமல் தவித்து வருகிறது. சாக்கடை நீரின் துர்நாற்றம் மற்றும் அடர்ந்த செடிகள் சூழ்ந்திருப்பதால் குரங்கின் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. குரங்கின் பரிதாப நிலையைக் கண்ட அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். உடனடியாக குரங்கை மீட்குமாறு வனத்துறைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்த குரங்கு தற்போது குளத்தின் நடுவே பரிதாபமாக மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு குரங்கை பத்திரமாக மீட்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி