பெண்குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிட்ட சேமிப்பை ஊக்குவிக்கும் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் (SSY) கீழ், 200 பெண் குழந்தைகளுக்கு புதிய வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டு, சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நம் தேசம் நம் பெருமை (NDNP) பவுண்டேஷனின் சமுதாயப் பணியின் ஒரு அங்கமா இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய தபால் அலுவலகத்தின் அவினாசிலிங்கம் கல்லூரி தபால் நிலையத்தில் இன்று இந்நிகழ்வு நடைபெற்றது.
மேலும், பாரதப் பிரதமரின் அன்னையின் நினைவாக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மரக்கன்று வழங்கப்பட்டது. இந்த விழாவில் நம் தேசம் நம் பெருமை அறக்கட்டளையின் தலைவர் பால சுப்ரமணியம், பொருளாளர் வி. முரளிதரன், செயலாளர் சாய் ஸ்மிருதி சண்முகம், செயலாளர் J. ரவீந்திரன் மற்றும் வித்யா சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.