கோவை: கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் கைது

60பார்த்தது
கோவை: கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் கைது
கோவை சவுரிபாளையம், உப்பிலிபாளையம் சாலையில் உள்ள அண்ணா நகரை சேர்ந்த பெண் (21), கோவையில் உள்ள கார் ஷோரூமில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக சுங்கம் காந்தி நகரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (22) என்பவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். 

இந்நிலையில் சங்கீதா கர்ப்பமடைந்தார். இதையடுத்து, ஜெயப்பிரகாஷ் கருவை கலைக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு ஜெயப்பிரகாஷ் மறுப்பு தெரிவித்ததோடு, ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ஜெயப்பிரகாஷின் தாயார் ஜோதியும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இது குறித்து சங்கீதா மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது தாயார் ஜோதி ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவரது தாயார் ஜோதியை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி