சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்! கத்திக்குத்தால் பரபரப்பு

53பார்த்தது
சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்! கத்திக்குத்தால் பரபரப்பு
டெல்லி திகார் சிறையில் இரு கும்பல் இடையே மோதல் ஏற்பட்டது. கோகி என்பவரின் கும்பலைச் சேர்ந்த ஹிதேஷ் மற்றும் தில்லு தாஜ்பூரியா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு இடையே நேற்று (ஜூன் 5) சண்டை ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹிதேஷ் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களிலும் சிறையில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்தி