நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், திமுக எம்பி ஆ.ராசாவின் எக்ஸ் தள பதிவு பேசு பொருளாகி உள்ளது. அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்! அட்சயப்பாத்திரத்தோடு ஆந்திராவும் பீகாரும்! கடவுளை மற மனிதனை நினை! பெரியார் வாழ்கிறார்!!" என பதிவிட்டுள்ளார்.