கர்நாடகா அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "மின் கட்டணத்தை அடிக்கடி உயர்த்துவதால் பாமர மக்கள் மற்றும் அனைத்து தர மக்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு சென்று காவிரி நீரை போராடி பெற்று தந்துள்ளார். கர்நாடகா அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.