ஜார்கண்டில் நடந்த ரயில் விபத்து சம்பவம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசிய அவர், நாட்டில் ரயில் விபத்துகள் சகஜமாகிவிட்டன. வாரந்தோறும் எங்காவது இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன. அரசை கடுமையாகக் கேட்கிறேன். இதை எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 13 நாட்களில் 7 இரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.