முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி பயணம்

77பார்த்தது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி பயணம்
2 நாள் பயணமாக இன்று (செப்., 26) மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்படுகிறார். இன்று மாலை 5.10 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சரை, இரவு டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து, நாளை (செப்., 27) காலை பிரதமர் மோடியை சந்தித்து பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி, ஜிஎஸ்டி இழப்பீடு, மேகதாது, முல்லைப்பெரியாறு விவகாரங்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்.

தொடர்புடைய செய்தி