அரசு முறை பயணமாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தமிழக நலத்திட்டங்கள் சார்ந்த கோரிக்கை மனுவை இன்று (செப்., 27) பிரதமர் மோடியை சந்தித்து மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதைத்தொடர்ந்து, டெல்லியில், சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, தமிழகம் திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்றார்.