விருகம்பாக்கம் - Virugampakkam

கோயம்பேடு: வெங்காயம் விலை உயர்வு

கோயம்பேடு: வெங்காயம் விலை உயர்வு

சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் கொள்முதல் விலையில் கிலோவிற்கு 50 விழுக்காடு வரை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தைக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 60 முதல் 65 லாரிகளில் வெங்காயம் கொண்டுவரப்படுகிறது. ஆனால் அந்த மாநிலங்களில் மழை மற்றும் விளைச்சல் பாதிப்பால் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. அந்த வகையில் கோயம்பேடு சந்தைக்கு 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்துள்ளது. இதனால் வெங்காயம் மொத்த விற்பனையில் கிலோவிற்கு ரூ. 60 முதல் ரூ. 90 ஆக விலை உயர்ந்துள்ளது.  இதே போல் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெங்காயம் சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 வரை அதிகரித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் நாள் ஒன்றிற்கு 1300டன் வெங்காயம் தேவைப்படும் நிலையில் வெங்காயம் வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காய்கறி வாங்க சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காய தட்டுப்பாடு என்பது தொடர்கதை ஆகிவருகிறது. இந்த ஆண்டும் வெங்காயம் வரத்து குறைய துவங்கிய நிலையில் விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

வீடியோஸ்


சென்னை
சென்னை: தீபாவளி பட்டாசு, மளிகை தொகுப்பு ரூ. 20 கோடிக்கு விற்பனை
Nov 09, 2024, 16:11 IST/சைதாபேட்டை
சைதாபேட்டை

சென்னை: தீபாவளி பட்டாசு, மளிகை தொகுப்பு ரூ. 20 கோடிக்கு விற்பனை

Nov 09, 2024, 16:11 IST
கூட்டுறவுத் துறை சார்பில் தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு மற்றும் தீபாவளி சிறப்பு தொகுப்பு ஆகியவை ரூ. 20. 47 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், அக். 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக கொண்டாடும் வகையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவுப்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் பட்டாசு மற்றும் ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தரமான பட்டாசுகளை உற்பத்தி நிறுவனங்களிலிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து குறைந்த விலையில், 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 பட்டாசு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு ரூ. 20. 01 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப் பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை அக். 28 முதல் நடைபெற்றது.