விநாயகர் சதுர்த்தி: போலீசார் ஆலோசனை

61பார்த்தது
விநாயகர் சதுர்த்தி: போலீசார் ஆலோசனை
விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் குறித்து இந்து அமைப்பினருடன் சென்னை போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 7-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வார்கள். பின்னர், தினமும் பூஜைகள் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் தொடர்பாக இந்து அமைப்பினருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் காவல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), ஆர். சுதாகர் (போக்குவரத்து), நரேந்திரன் நாயர் (வடக்கு) ஆகியோர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி