சென்னை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் பிரதான சாலையில் பிரஸ்டீஜ் மல்டி ஹோம்ஸ் பவுல்ராஜ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. காவல்துறைக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்பின் மீது ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளனர்.
வீடும் இரண்டு நாட்களாக பூட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சம்பந்தப்பட்ட பூட்டப்பட்ட வீட்டை உடைத்து சோதனை நடத்தியுள்ளனர். வீட்டின் உள்ளே அழுகிய நிலையில் இளைஞர் ஒருவர் கிடந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் தலையில் வெட்டு காயங்களுடனும் முகத்தில் வெட்டுப்பட்டு கத்தியுடன் இருப்பது தெரிய வந்தது.
அழுகிய நிலையில் இருக்கும் உடலை மீட்டு விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் உள்ள வெட்டு காயங்களை வைத்து பார்க்கும் பொழுது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்டவர் வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேஷ் என தெரியவந்துள்ளது. இந்த வீட்டு உரிமையாளர் இடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.