மகளுக்கு பாலியல் தொல்லை என பொய் புகார்: கணவர் விடுதலை

74பார்த்தது
மகளுக்கு பாலியல் தொல்லை என பொய் புகார்: கணவர் விடுதலை
சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் முத்து. இவரது இசைக்குழுவில் பாடகியாக சேர்ந்தவர் வனிதா. ஏற்கனவே திருமணமானவர். அவருடன் காதல் ஏற்பட்டு, முத்து திருமணம் செய்துகொண்டார். பின், கருத்து வேறுபாடால் முத்துவிடம் இருந்து விவாகரத்து கேட்டு, வனிதா வழக்கு தொடர்ந்தார். வழக்கை வாபஸ் பெற வனிதாவிடம் முத்து வற்புறுத்திஉள்ளார்.

இந்நிலையில், கணவர் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்தார். 'ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து என்னை இரண்டாவதாக திருமணம் செய்து முத்து மோசடி செய்துள்ளார். எங்களுக்கு பிறந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். என் உழைப்பில் வந்த பணத்தை பறித்ததோடு, வரதட்சணை கேட்டு கொடுமை செய்துவருகிறார்' என, புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, முத்து மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 'போக்சோ' வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.

தொடர்புடைய செய்தி