பாஜக கூட்டணி வெல்லும்: ஓபிஎஸ்

57பார்த்தது
பாஜக கூட்டணி வெல்லும்: ஓபிஎஸ்
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது அரசியல் எதுவும் பேசவில்லை. மக்களவைத் தேர்தல் என்பது இந்திய பிரதமரை தேர்வு செய்கிற தேர்தல். அந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் நிச்சயமாக வெற்றி பெறும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வருவார்" என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அமமுகவுடன் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “திருச்சி வந்த பிரதமரை சந்திப்பதற்கு வாய்ப்புக் கேட்டிருந்தேன். பிரதமரை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கொடுத்தனர். மனநிறைவோடு அதை நானும் செய்தேன். இந்தச் சந்திப்பில், அரசியல் எதுவும் இல்லை. அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்த்துக் கடிதத்தைக் கொடுத்தேன். வாய்ப்புகள் வரும்போது உறுதியாக டெல்லிக்குச் செல்வேன்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி