மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகள் வெளியீடு

83பார்த்தது
மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த 2023 ஆம் ஆண்டு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று 2024 ஆம் ஆண்டு ஜனவரி ஏப்ரல் மாதங்களில் நேர்முக தேர்வையும் எதிர்கொண்டவர்களில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி ஐ. ஏ. எஸ், ஐ. பி. எஸ், ஐ. ஆர். எஸ் மற்றும் மத்திய அரசு பணி குரூப் ஏ குரூப் பி ஆகிய பதவிகளில் பணியாற்ற தேர்ச்சி பெற்ற 1016 நபர்களின் பெயர் பட்டியலை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 1143 காலி பணியிடங்களில் இந்த தேர்ச்சி பெற்ற 1016 பணியாளர்களும் பணியமர்த்தப்படுவார்கள். தமிழகத்தை இரண்டாம் இடமும், இந்திய அளவில் 78 ஆவது இடத்தையும் மருத்துவர் பிரசாந்த் பிடித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி