பெண்கள் நாட்டின் கண்கள் திட்டம் மூலம் ரூ.6 லட்சம்

64பார்த்தது
பெண்கள் நாட்டின் கண்கள் திட்டம் மூலம் ரூ.6 லட்சம்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அவரது தாயாரும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அருப்புக்கோட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், விஜய பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவுடன் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக மாற்றி ரூ.500 கூலி கிடைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார். பெண்கள் நாட்டின் கண்கள் என்கின்ற திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் ரூபாய் தொகுதி மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி