கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

693பார்த்தது
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
சென்னை: கல்விக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மன உளைச்சலில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் விக்னேஷ்(17). வில்லிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் அழகுகலை நிபுணராக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி