பரோலில் வந்து 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி பிடிபட்டார். 2012 முதல் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கண்ணனை வேளாங்கண்ணியில் போலீஸ் கைது செய்தது. பரங்கிமலையில் நடந்த கொலை வழக்கில் கண்ணனுக்கு (56) பூந்தமல்லி நீதிமன்றம் 2007ல் ஆயுள் தண்டனை வழங்கியது. 2012 ஜனவரியில் புழல் சிறையில் இருந்த கண்ணனுக்கு பரோல் வழங்கப்பட்டபோது தப்பினார்.