பள்ளிகள் திறப்பு நாளான ஜூன் 10ஆம் தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு, புத்தகப்பை, காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள், அந்தந்த பள்ளியிலேயே ஆதார் எண்களை பதிவு செய்யலாம் மற்றும் ஆதார் எண்களை புதுப்பிக்கலாம் என்றும், 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.