தமிழக வெற்றிக்கழக கொடியில் யானை சின்னம் பயன்படுத்த தடை கோரி, பகுஜன் சமாஜ் அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் இந்த பதிலை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்த அக்கட்சியின் தலைவர் விஜய், பின்னர் 45 அடி உயர கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
நடிகர் விஜயின் கட்சி கொடியில், மேலும் கீழும் சிவப்பு நிறத்திலும், வாகை மலர் சுற்றிலும் 28 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பச்சை நிறத்தில் 23, நீல நிறத்தில் 5 நட்சத்திரங்கள் ஒளிரும் வகையில் உள்ளது.
தவெக கொடியில் இடம்பெற்றுள்ள நிறம், யானை, பூ குறித்து பல்வேறு எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் எழுந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக யானை படத்தை நீக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்திடம் புகார் அக்கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதல் அளிப்பதில்லை. அங்கீகாரமும்
வழங்குவதில்லை என்று, பகுஜன் சமாஜ் அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் இந்த பதிலை தெரிவித்துள்ளது.
மேலும், அரசியல் கட்சி கொடியில் இடம்பெறும் சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது என்றும், இதில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்றும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.